CRIME
என் பொண்ணு பின்னாடி ஏன்டா வர..? “ஒரு இரவு மட்டும் உன் மகளோடு” பள்ளிச் சிறுமியை பின் தொடர்ந்த காமப்பிசாசு… தந்தை கொடுத்த தரமான பதிலடி.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
தாய்லாந்தில் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிச் சென்ற சிறுமி ஒருவரை, மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்து (Stalking) வந்துள்ளார். வீட்டிற்கு வரும் வழி நெடுகிலும் அந்த நபர் பின்தொடர்வதைக் கவனித்த சிறுமி, அச்சத்துடன் தனது தந்தைக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த தந்தை, தனது மகளுக்குப் பாதுகாப்பாக உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த தந்தை, தனது மகளைப் பின்தொடர்ந்து வந்த அந்த நபரை வழிமறித்து நேருக்கு நேர் மிரட்டலாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். “என் மகளை ஏன் பின்தொடர்ந்து வருகிறாய்?” என்று தந்தை கடுமையாகக் கேட்டபோது, அந்த நபர் சிறுமியுடன் “ஒரு இரவு முழுவதும் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன்” என்று கொஞ்சமும் கூச்சமின்றி முகம் சுளிக்கும் வகையில் பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை அந்த நபரை அங்கேயே மடக்கிப் பிடித்து நியாயம் கேட்டுள்ளார்.
மகளின் பாதுகாப்பிற்காகத் தந்தை அந்த நபரை மடக்கிப் பிடித்து எச்சரிக்கும் காட்சிகளும், அந்த நபர் கூறிய அதிர்ச்சியூட்டும் பதிலும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியானது. இந்தச் சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பையும், தந்தையின் தைரியமான நடவடிக்கைக்குப் பாராட்டுகளையும் ஒரே நேரத்தில் பெற்று வருகிறது.
