CRIME
பகீர்..! விருந்து நிகழ்ச்சியில் இரத்த ஆறு.. சாப்பிட்டுக் கொண்டிருந்த மின் ஒப்பந்ததாரருக்கு நேர்ந்த கொடூரம்.. 2 ஆண்டுகள் கழித்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல்… மிரள வைக்கும் பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள அகிரௌலி குர்த் கிராமத்தில், பிரம்மபோஜ் விருந்து நிகழ்ச்சியில் வரிசையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மின் ஒப்பந்ததாரர் சிவகுமார் திவாரி என்பவரை மர்ம நபர்கள் வாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட தகராறில் கொலையுண்ட ஆதர்ஷ் குமார் சௌதரியின் கொலை வழக்கில் சிவகுமார் திவாரி முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுப் பின்னர் ஜாமினில் வெளிவந்த நிலையில், சௌதரி குடும்பத்தினரின் மனதில் நீடித்த பழிவாங்கும் வெறியே இந்த கோரச் செயலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொல்லப்பட்ட ஆதர்ஷின் சொந்த சகோதரர்கள் இருவரும் தங்களது உறவினரின் பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விருந்து விழாவில் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் அரங்கேறிய இந்தச் சதி மற்றும் படுகொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
