“கருணை இருந்தால் வள்ளலாகலாம், கடமை இருந்தால் வீரனாகலாம்” We will come back strong… சட்டமன்றத்தில் மாஸ் காட்டிய நிதியமைச்சர் மரியவில்சன்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கருணை இருந்தால் வள்ளலாகலாம், கடமை இருந்தால் வீரனாகலாம்” We will come back strong… சட்டமன்றத்தில் மாஸ் காட்டிய நிதியமைச்சர் மரியவில்சன்…!!

Published

on

பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் மரியவில்சன், நிதிநிலை குறித்து ஏற்கனவே வெள்ளை அறிக்கை வெளியிட்டபோதே அரசின் நிலைமை வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், அதில் உண்மைக்கு மாறாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், நிதிநிலை தொடர்பாக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ஏற்படக்கூடிய இழப்புகள் குறித்து விரைவில் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

தனது உரையின் போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்த அவர், “குறி வைத்தால் தவற மாட்டேன்; தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்” என்ற புகழ்பெற்ற வரியை மேற்கோள் காட்டினார். தொடர்ந்து, “கருணை இருந்தால் வள்ளலாகலாம், கடமை இருந்தால் வீரனாகலாம், பொறுமை இருந்தால் மனிதனாகலாம், மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

Advertisement

இது தமக்கு முதலாவது சட்டமன்ற அனுபவம் என்பதால், பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் தங்களுக்குப் பல புதிய தகவல்களையும் அறிவையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட மரியவில்சன், அவர்களிடம் இருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு தவறுகளைத் திருத்திக்கொள்வோம் என்றார். இறுதியாக, “We will come back strong” என நம்பிக்கையுடன் கூறிய அவர், வரும் நாட்களில் அரசு இன்னும் வலுவாக மீண்டெழுந்து செயல்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in