LATEST NEWS
“ரூ.4000 யாருக்குமே வரல.. ஆனா தனுஷே வந்துட்டாரு” விஜய்யை VIP பாணியில் வெளுத்து வாங்கிய கனிமொழி.. களம் சூடேறிய பின்னணி..!!
தமிழக இடைத்தேர்தல் களம் சுடச்சுடச் சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பி-யுமான கனிமொழி, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் தலைவரான முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாகச் சாடியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தவெக அரசைக் கண்டித்து, நடிகர் தனுஷின் திரைப்படக் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு அவர் பேசிய பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாரத்தின் போது பேசிய கனிமொழி எம்பி, “வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை தருவேன் எனக் கூறித்தான் முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்தார்” என்று சுட்டிக்காட்டினார். ஆனால் ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் ஆகியும் இன்னும் யாருக்கும் அந்த 4,000 ரூபாய் போய் சேரவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், “ரூ.4000 வரல, ஆனா வேலையில்லாத பட்டதாரி தனுஷே அரசியலுக்கு வந்துட்டார்” என நடிகர் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படப் பாணியில் கிண்டலாகக் விமர்சித்துப் பேசினார்.
தொடர்ந்து தவெக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த கனிமொழி, குடும்பத் தலைவிகளுக்கு வழங்குவதாகக் கூறிய 2,500 ரூபாய்க்குப் பதிலாக 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் தருவதாகக் கூறிவிட்டு தற்போது 3 சிலிண்டர்கள் மட்டுமே தருவதாகவும் தேர்தல் வாக்குறுதி மீறல்களைப் பட்டியலிட்டார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுக் கிடப்பதாகக் கூறிய அவர், தவெக அரசு முன்வைத்த மாற்றம் இதுதானா என்றும் முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
