14 வருஷம் ஆச்சு… “ஒரு குழந்தை கூட உன்னால பெக்க முடியல” மனைவியின் கழுத்தை அறுத்து.. துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்… அடுத்து நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

14 வருஷம் ஆச்சு… “ஒரு குழந்தை கூட உன்னால பெக்க முடியல” மனைவியின் கழுத்தை அறுத்து.. துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்… அடுத்து நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தனது மனைவியின் தங்கை திருமண விழாவில் பங்கேற்க வந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் பகுதியின் நானௌதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வியாழக்கிழமை மாலை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமண வீடு ஒன்றில் நடந்த இந்த கொடூரக் கொலையால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கொல்லப்பட்ட பெண் 30 வயதான கஜாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும் கைரானா பகுதியைச் சேர்ந்த 33 வயதான இர்ஃபான் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. நீண்ட நாட்களாகியும் இந்தத் தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் வீட்டின் மேல் தளத்தில் இருந்த அறையில் குழந்தையில்லாதது குறித்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

Advertisement

வாக்குவாதம் கடுமையான கோபமாக மாறிய நிலையில், இர்ஃபான் தான் மறைத்து வைத்திருந்த சவரக் கத்தியால் (உஸ்தரா) கஜாலாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கஜாலாவின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வருவதைக் கண்ட இர்ஃபான், அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், கஜாலா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இர்ஃபானுக்கு மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in