CRIME
“அட கடவுளே… இது என்ன உலக மகா அநியாசம்..!” 3.5 ஆண்டுகள் காதலித்துவிட்டு சாதியைச் சொல்லி காதலன் செய்த துரோகம்.. ஆதரவற்ற நிலையில் கதறும் பெண்ணின் பகீர் பின்னணி..!!
உத்தரபிரதேசம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த திடோல் கிராமத்தைச் சேர்ந்த காஷ்யப் சமூகப் பெண் ஒருவர், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் மூன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக வாக்களித்துவிட்டு ஏமாற்றியதுடன் அவளது சமூகத்தைக் காரணம் காட்டிப் பின்வாங்கிய அந்த இளைஞருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக ஆதர்ஷ் மண்டி காவல் நிலையத்தில் நீதி கேட்டு அலைந்து வருகிறார். ஆனால், கிராமப் பஞ்சாயத்தோ பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் ஒரு வார்த்தைகூட விசாரிக்காமல் அவரே பணம் கேட்பதாக பழிசுமத்தியதுடன், தன் சொந்த வீடு, குடும்பம், கிராமம் மற்றும் எந்தவித ஆதரவுமின்றி நிர்கதியாக நிற்கும் அந்தப் பெண் யோகி ஆதிநாத்யின் முதலமைச்சர் போர்டல் முதல் எஸ்பி மற்றும் டிஎம் அலுவலகங்கள் வரை அனைத்து இடங்களிலும் முறையிட்டும் இதுவரை எந்தவொரு நீதியும் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
ये लड़की उत्तरप्रदेश के गांव टिटोली की है, तीन महीने से शामली आदर्श मंडी थाने के चक्कर काट रही है,
प्यार धोखे का मामला है लड़की कश्यप समाज से और लड़का जाट समाज से है।
मगर इंसाफ अब तक इसकी दहलीज़ तक नहीं पहुंचा।
यह एक लड़का के साथ साढ़े तीन साल के रिलेशनशिप में थी
शादी का वादा… pic.twitter.com/y7Co7WnG9V— Rahul Kumar (@MukAn_X) August 13, 2026
காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டுத் தனித்து விடப்பட்டுள்ள இந்த விவகாரத்தில், சாதியப் பின்னணியும் பஞ்சாயத்தின் ஒருபக்கச் சார்பான முடிவுகளும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை முற்றிலுமாகச் சிதைத்துள்ளன. குடும்பத்தினரின் ஆதரவையும் இழந்து, நீதி வேண்டி காவல் நிலைய வாசல்களில் கண்ணீருடன் காத்துக்கிடக்கும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசு அதிகாரிகளும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்துத் தனக்கு நீதி வழங்க வேண்டும் என்பதே அவளது இப்போதைய ஒரே கண்ணீர்க் கோரிக்கையாக உள்ளது.
