“என்னை பெரிய பசங்க அடிக்குறாங்க… ஆசிரியர் போன் பாத்துட்டே இருக்காங்க..!” அரசுப்பள்ளியில் நேரந்த கொடூரம்.. காவல்துறையினரிடம் கதறி அழுத சிறுவனின் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை பெரிய பசங்க அடிக்குறாங்க… ஆசிரியர் போன் பாத்துட்டே இருக்காங்க..!” அரசுப்பள்ளியில் நேரந்த கொடூரம்.. காவல்துறையினரிடம் கதறி அழுத சிறுவனின் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாதவ் மிஷ்ரா என்ற சிறுவன், அங்குள்ள கல்விச் சீரழிவை எதிர்த்து காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளான். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை என்றும், வகுப்பறையில் எப்போதும் தனது கைபேசியைப் பயன்படுத்துவதிலேயே மும்முரமாக இருக்கிறார் என்றும் அச்சிறுவன் அழுதுகொண்டே காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான். இதனால் மாணவர்கள் படிக்காமல் விளையாடிக் கொண்டே இருப்பதாகவும், பள்ளியின் ஒட்டுமொத்த கல்வி முறையும் முடங்கியுள்ளதாகவும் அவன் குற்றம் சாட்டியுள்ளான்.

प्राथमिक विद्यालय में पढ़ाई होती नहीं हैं “मैडम फोन देखती” रहती हैं…बड़े बड़े बच्चे मुझे मारते पीटते हैं..कोई सुनवाई नहीं करता है!

यूपी की शिक्षा व्यवस्था की हकीकत देखिए !

कानपुर देहात के एक सरकारी स्कूल के मासूम छात्र माधव मिश्रा को सुनिए –

माधव विद्यालय की सुस्त पड़ी… pic.twitter.com/dLg6gscvuA— Rahul Saini (@JtrahulSaini) August 13, 2026

பாடம் நடத்தாதது மட்டுமின்றி, பள்ளியில் படிக்கும் மூத்த மாணவர்கள் தன்னைத் தாக்குவதாகவும், இது குறித்து பலமுறை ஆசிரியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாதவ் மிஷ்ரா வேதனை தெரிவித்துள்ளான். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெற்ற போதிலும், மாணவர்களின் கல்வி என்பது வெறும் கடமைக்காக மட்டுமே இருப்பதாக இந்தச் சம்பவம் காட்டுகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடும் இத்தகைய மோசமான கல்வி முறையில் உடனடியாக மாற்றங்களும் சீர்திருத்தங்களும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in