CRIME
“என் சாவுக்கு இவங்கதான் காரணம்… தயவுசெஞ்சு என் பெற்றோரைக் காப்பாத்துங்க..!” தற்கொலைக்கு முன் வாலிபர் வெளியிட்ட நடுக்கமூட்டும் நேரடி மரண வாக்குமூல வீடியோ..!!
சண்டீகரைச் சேர்ந்த பர்வீன் கார்க் என்ற வாலிபர், தனது அண்ணி கிம்மி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த அசுரத்தனமான மன உளைச்சல் மற்றும் மிரட்டல்களால் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் தற்பொழுது பெரும் விவாதப் புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் பதிவு செய்துள்ள அதிர்ச்சியூட்டும் மரண வாக்குமூல வீடியோவில், தனது அண்ணி கிம்மி, அவரது தாய் பபிதா மற்றும் தந்தை சஞ்சீவ் குமார் சிங்லா ஆகிய மூவரே தனது இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று அப்பட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நோய்டாவைச் சேர்ந்த அங்கிதா, சங்க்ரூரைச் சேர்ந்த ஆஷிமா ஆகிய கிம்மியின் இரு சகோதரிகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அவரது தம்பி ஆகியோர் இணைந்து, தனது குடும்பத்தினரைத் தொடர்ச்சியாக அசிங்கப்படுத்தி, துன்புறுத்தி வந்ததாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். தனது தாய் அண்ணி கிம்மியைப் பாசமாகப் பார்த்துக்கொண்டு, அவரது அத்தனை அசாத்திய கோரிக்கைகளையும் நிறைவேற்றிய போதிலும், அவர்கள் தங்கள் மீது போலி வரதட்சணைப் புகார்களைக் கூறி அண்ணன் மீது தவறான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அராஜகம் செய்ததாகக் கார்க் அந்த வீடியோவில் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
https://twitter.com/ekamnyaay/status/2095486027934916624/video/1
சண்டீகரில் வைத்துத் தன்னை நேரில் மறித்த அந்தக் கும்பல், தனது பெற்றோரிடமிருந்து ரூ.60 முதல் 70 லட்சம் வரையிலான இமாலயப் பணத்தைப் பறித்துத் தருமாறு மிரட்டியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்தால் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிவிடுவோம் என அசுரத்தனமாக அச்சுறுத்தியதாகவும் பர்வீன் கார்க் அம்பலப்படுத்தியுள்ளார். சங்க்ரூர் பகுதியில் தங்களுக்கு உள்ள காவல்துறை மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களைத் துவம்சம் செய்துவிடுவோம் என்று அவர்கள் இறுமாப்புடன் பேசியதாகவும், இந்த அநீதிக்கு எதிராகத் தற்போதைய அரசாங்கமும் நீதித்துறையும் தலையிட்டுத் தனது மரணத்திற்குப் பின்னாடி இருக்கும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பர்வீன் கார்க் தனது அசல் கையெழுத்து மற்றும் கைரேகையுடன் கூடிய ஒரு மாபெரும் தற்கொலைக் கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளார். அதில் கிம்மி, பபிதா மற்றும் சஞ்சீவ் குமார் சிங்லா ஆகியோரின் பெயர்களை மீண்டும் குறிப்பிட்டு, தனது வயதான பெற்றோர் மற்றும் அண்ணனுக்குக் தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ள இந்த ரியல் லைஃப் விபரீதக் கதை தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
