LATEST NEWS
10 நாட்கள் மரணப் போராட்டம்.. நேபாள சுரங்கத்தில் நிகழ்ந்த அதிசயம்… 2 தொழிலாளர்களை உயிருடன் மீட்ட ராணுவம்..!!
நேபாளத்தின் திரிஷூலி பகுதியில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த 10 நாட்களாக உள்ளே சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்களை, மீட்புப் படையினர் அதிரடியாகச் செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ளனர். உணவு மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத இக்கட்டான சூழலில், இத்தனை நாட்களாகப் போராடி வந்த அவர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது, அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் மீட்புக் குழுவினர் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட இருவருக்கும் உடனடியாக அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்தச் சுரங்கத்திற்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் தேடுதல் பணி தற்போதும் தீவிரமாகத் தொடர்ந்து வருகிறது. மீட்புப் படையினர் நவீன உபகரணங்களின் உதவியோடு தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் சுரங்கத்தின் உட்பகுதிகளில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
