LATEST NEWS
“பணம், புகழ் நிம்மதி தராது” கோடி கோடியாய் சொத்து.. உச்சத்தில் பிசினஸ்.. அத்தனையையும் விற்றுவிட்டு சாமியாராகும் பிரபல ஐஸ்கிரீம் தொழிலதிபர் சிரிபோங்..!!
பணம் மற்றும் புகழ் மட்டுமே வாழ்க்கையில் முழுமையான நிம்மதியைத் தந்துவிடாது என்பதை உணர்த்தும் வகையில், தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைத் துறந்துவிட்டு சாமியாராக மாற முடிவு செய்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டு விளங்கும் பிரபலமான ‘ஹாவெல்ஸ்’ ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிறுவனர் சிரிபோங் அக்காரஸ்ரியுக் என்பவரே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
பல ஆண்டுகளாகத் தனது கடின உழைப்பின் மூலம் இந்தத் தொழிலைக் கட்டியெழுப்பிய சிரிபோங், தற்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனது நிறுவனத்தை மொத்தமாக விற்றுவிட்டு, காட்டில் துறவியாக (சாமியாராக) வாழ முடிவு செய்துள்ளார். வணிக உலகில் அவரது ‘ஹாவெல்ஸ்’ ஐஸ்கிரீம் நிறுவனம் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் போதே அவர் எடுத்துள்ள இந்தத் துறவற முடிவு, ஒட்டுமொத்த சர்வதேச தொழில் உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் வியப்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதுகுறித்துத் தெரிவித்துள்ள சிரிபோங், நிறுவனம் வணிக ரீதியாக எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும், தனது நீண்ட நாள் ஆன்மிகக் கனவை நிறைவேற்றுவதற்காகவே இந்த இறுதி முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது நிறுவனத்தின் முழுமையான விற்பனை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
