LATEST NEWS
“செம ட்விஸ்ட்.. ஆடி காரை கெத்தா தூக்கிய திருடர்கள்… GPS-ஐ வச்சு ஓனர் போட்ட தரமான செக்மேட்..” சுங்கச்சாவடியில் நடந்த கூத்து..!!
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆடி கார் ஒன்றை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ள நிலையில், காரின் உரிமையாளர் சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்துள்ளார்.
தன் கார் திருட்டுப்போனதை அறிந்த காரின் உரிமையாளர், உடனடியாக பொலிஸாருக்கு தகவலளித்ததுடன், ஜிபிஎஸ் மூலம் தன் காரை கண்காணிக்கத் துவங்கியுள்ளார். கார் நெடுஞ்சாலை ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்க, சரியாக சுங்கச்சாவடி ஒன்றை நெருங்கும்போது, மொபைல் ஆப் ஒன்றின் உதவியுடன் தன் காரின் எஞ்சினுடைய இயக்கத்தைத் துண்டித்துள்ளார்.
அதற்குள், காரை பின்தொடர்ந்த பொலிஸார் கார் நிற்கும் இடத்தை அடைய, காருக்குள்ளிருந்த திருடர்கள் வகையாக சிக்கிக்கொண்டார்கள். காரைத் திருடிய 18 மற்றும் 19 வயதுடைய அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த பொலிஸார் அவர்களைக் காவலில் அடைத்துள்ளார்கள்.
