CRIME
பகீர்.. கோர்ட் வாசலில் கேட்ட அலறல் சத்தம்…மனைவியின் கழுத்தை நெரித்து கொலை முயற்சி… தடுத்த குடும்பத்துக்கும் நேர்ந்த கதி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா திரிபாதி என்ற பெண்ணிற்கும் பிரிஜ்மன்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட மணீஷ் குமார் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பிரியா வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், மகாராஜ்கஞ்ச் குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாம்ச வழக்கும் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காகப் பிரியாவின் தந்தை லட்சுமிகாந்த் வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். மதியம் 2 மணியளவில் பிரியா தனது சகோதரி பிரியங்கா மற்றும் தந்தையுடன் நீதிமன்ற அறையை விட்டு வெளியே வந்தபோது, பின்னால் வந்த கணவர் மணீஷ் மிஸ்ரா, பிரின்ஸ் மிஸ்ரா மற்றும் சதீஷ் மிஸ்ரா ஆகியோர் திடீரெனத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மூவரும் சேர்ந்து பிரியாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய தீவிர முயற்சி செய்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த பிரியாவின் தந்தை மற்றும் சகோதரியையும் கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கி, அவர்களது கழுத்தையும் நெறிக்க முயன்றனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடோடி வந்த காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு குடும்பத்தினரைக் காப்பாற்றினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மகாராஜ்கஞ்ச் போலிஸார், இதில் தொடர்புடைய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
