LATEST NEWS
கால்பந்து மைதானத்தில் கொடூரம்..! போட்டி நடுவே மின்னல் தாக்கி 24 வயது வீரர் சம்பவ இடத்திலேயே கருகிப் பலி… 12 பேர் மருத்துவமனையில் அனுமதி… பகீர் வீடியோ..!!
தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்தின் நராதிவாத் மாகாணத்தில் உள்ள சாந்திபாப் மைதானத்தில் GOLOK FA CUP போட்டியின் அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மைதானத்தில் பலத்த மின்னல் தாக்கியதில், 24 வயதான சோஃப்பான் அவே என்ற கால்பந்து வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
https://www.instagram.com/reel/DbpzMmiAAXU/?utm_source=ig_web_button_share_sheet
இந்த அதிர்ச்சி சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்து உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியின் போது திடீரென மின்னல் தாக்கி வீரர் பலியான இச்சம்பவம், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
