“ரூ.140-க்கு உன் உடலை விற்கிறேன்” கதறிய மாணவி… ஆன்லைன் மிரட்டல், போலீஸ் அலட்சியம்… தேர்வு முறைகேடு போராட்டத்தில் வெடித்த புதிய பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரூ.140-க்கு உன் உடலை விற்கிறேன்” கதறிய மாணவி… ஆன்லைன் மிரட்டல், போலீஸ் அலட்சியம்… தேர்வு முறைகேடு போராட்டத்தில் வெடித்த புதிய பரபரப்பு..!!

Published

on

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தங்களை குறிவைத்து இணையத்தில் கொச்சையான மிரட்டல்களும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகப் மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த இணையவழித் துன்புறுத்தல்கள் குறித்துப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகள் சிலருடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தங்களுக்கு நேர்ந்த மிரட்டல்கள் குறித்தும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை காட்டி வரும் பாராமுகம் குறித்தும் அம்மாணவிகள் தங்களது குமுறல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த மாணவி ரியா ஆஹிர் பேசுகையில், தங்களுக்கு எதிராக நடப்பது வெறும் சாதாரண ட்ரோலிங் (Trolling) அல்ல என்றும், அது ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் என்றும் குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் சாதாரண இணையவாசிகள் மட்டுமின்றி, குறிப்பிட்ட அரசியல் கட்சித் தொண்டர்களும் இணைந்து தனக்கு எதிராக “ரூ.140-க்கு உடலை விற்கிறேன்” என்பது போன்ற மிகக் கொச்சையான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, மிரட்டல் விடுத்து வருவதாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.

Advertisement

இந்தக் கொடூரமான பாலியல் ரீதியான மற்றும் தனிநபர் தாக்குதல்கள் குறித்துக் கடந்த ஜூலை 27 அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை காவல்துறையினர் எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யாமல் பாராமுகமாகச் செயல்பட்டு வருவதாகவும் அம்மாணவி வேதனை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in