கொசுவைக் கொல்ல அருவாளைப் பயன்படுத்துவதா..? முதல்வர் விஜய் அறிவற்றவர்… உதயநிதி கைதுக்கு சேத்தன் அஹிம்சா கண்டனம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொசுவைக் கொல்ல அருவாளைப் பயன்படுத்துவதா..? முதல்வர் விஜய் அறிவற்றவர்… உதயநிதி கைதுக்கு சேத்தன் அஹிம்சா கண்டனம்..!!

Published

on

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான சேத்தன் அஹிம்சா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தற்போதைய தமிழ்நாடு அரசு ஒரு ‘போலீஸ் அரசாக’ மாறிவருகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் அருவருப்பானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அதற்காக அவரைக் கைது செய்த நடவடிக்கை முற்றிலும் ஜனநாயக விரோதமானது என்று கூறினார். மேலும், இந்த நடவடிக்கையை ‘கொசுவைக் கொல்ல அருவாளைப் பயன்படுத்துவதா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதே விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும் சேத்தன் அஹிம்சா கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சர் விஜய்யை ‘அறிவற்றவர்’ என்று விமர்சித்துள்ள அவரது இந்த அறிக்கை, தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in