LATEST NEWS
“நயினார் நாகேந்திரனைத் தொட்டால் ஒரே நாளில் ஆட்சி கவிழ்ந்துவிடும்..!” மத்திய அரசை பார்த்து நடுக்கும் தவெக.. துரைமுருகனின் அதிரடிப் பேச்சால் உலுங்கிப்போன அரசியல் களம்..!!
உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில் காட்டிய வேகத்தை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மீது காட்ட முடியாது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அவ்வாறு கைது நடவடிக்கை எடுத்தால் ஒரே நாளில் மத்திய அரசு தவெக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்ற அச்சம் இருப்பதாகவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக மற்றும் பாஜக இடையே ரகசியக் கூட்டணி உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் முன்வைத்து வரும் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இடையே துரைமுருகன் வெளிப்படுத்தியுள்ள இந்த அரசியல் வியூகப் பேச்சுகள், தற்போதைய தேர்தல் மற்றும் அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
