திமுகவுக்கு அடுத்தடுத்த செக்..! ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. அமைதியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ஆக்‌ஷன்..! சிக்குவாரா அமைச்சர் துரைமுருகன்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுகவுக்கு அடுத்தடுத்த செக்..! ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. அமைதியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ஆக்‌ஷன்..! சிக்குவாரா அமைச்சர் துரைமுருகன்..?!

Published

on

திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு, சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே விரிவான அறிக்கை அளித்தும், ஆரம்பத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் விட்டதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது இப்புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரப்பூர்வமாக முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. நீர்நிலைகள் மற்றும் மணல் குவாரிகள் நீர்வளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சூழலில், இந்தத் துறைக்கு தலைமை வகித்த அமைச்சர் துரைமுருகனுக்கு இந்த நடவடிக்கை பெரும் அரசியல் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in