“கடைசி நிமிட கடிதத்தில் இருந்தது என்ன..? அச்சுறுத்தலா அல்லது கடுமையான மன உளைச்சலா…? ஆசிஷ் பானர்ஜி தற்கொலையால் கதறும் மம்தா… உடனே சிபிஐ விசாரணை வேண்டி குரல் கொடுக்கும் சுவேந்து…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கடைசி நிமிட கடிதத்தில் இருந்தது என்ன..? அச்சுறுத்தலா அல்லது கடுமையான மன உளைச்சலா…? ஆசிஷ் பானர்ஜி தற்கொலையால் கதறும் மம்தா… உடனே சிபிஐ விசாரணை வேண்டி குரல் கொடுக்கும் சுவேந்து…!!

Published

on

மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணைச் சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆசிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த அலுவலகத்தில் இருந்து ஒரு தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐந்து முறை எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்த ஆசிஷ் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்புகளையும், அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தவர். ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் துருவா சாகாவிடம் 24,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவருடைய மறைவுக்கு முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கவலை தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸில் உள்ள ஊழல்வாதிகள் யாராவது அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பிய அவர், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும், மீட்கப்பட்ட தற்கொலைக் கடிதம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Advertisement

அதேவேளையில், முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சமூக வலைதளப் பதிவில், ஆசிஷ் பானர்ஜியின் மறைவு தமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை மக்களுக்குச் சேவை செய்வதிலேயே கழித்தவர் என்றும், ராம்பூர்ஹாட்டிற்குப் பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தவர் என்றும் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், அவர் ஆற்றியப் பணிகளையும் மீறி, கடைசி காலத்தில் அவர் மீது அவதூறுகள் பரப்பப்பட்டு, பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தொடர்ச்சியான மன உளைச்சலுக்கும் கடுமையான அழுத்தத்திற்கும் ஆளாக்கப்பட்டதே இந்த சோகமான முடிவுக்குக் காரணம் என்று மம்தா பானர்ஜி வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in