LATEST NEWS
“போனால் போகட்டும் போடா…” த.வெ.க-வில் ஓரங்கட்டப்பட்டாரா நாஞ்சில் சம்பத்..? கொந்தளிக்கும் தொண்டர்கள்.. வைரல் பதிவுக்குப் பின் வெளியான ஷாக்கிங் உண்மை..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் பிரச்சாரக் குழு மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், த.வெ.க. கூட்டணியில் வைகோ இணைந்த பிறகு நாஞ்சில் சம்பத்துக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா. என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது” என்று வேதனையுடன் பதிவிட்டிருந்தார். இவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேட்டபோது, “நம்பிக்கை நாஞ்சில் சம்பத்துக்கு எதுவும் ஆகவில்லை, ஆகாது; மனதிலிருந்த வலியைத்தான் பதிவாக வெளிப்படுத்தினேன். கட்சியின் பரப்புரைச் செயலாளரான எனக்கு நட்சத்திரப் பட்டியலிலும் பிரச்சாரத்திலும் வாய்ப்பு தரப்படாத ஆதங்கத்தைத்தான் தெரிவித்தேன். அதற்கு நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்; நான் த.வெ.க.விலிருந்து விலகவில்லை, விலகவும் மாட்டேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
