“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. தடம் மாறும் சீமானின் அரசியல் பாதை… உறைந்துபோன தொண்டர்கள்.. நாம் தமிழர் கட்சியில் அரங்கேறும் திடுக்கிடும் திருப்பங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. தடம் மாறும் சீமானின் அரசியல் பாதை… உறைந்துபோன தொண்டர்கள்.. நாம் தமிழர் கட்சியில் அரங்கேறும் திடுக்கிடும் திருப்பங்கள்..!!

Published

on

தனித்து மட்டுமே போட்டியிடுவோம் என்று கூறிவந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆதரவுடன் பொது வேட்பாளராகக் களமிறங்க உள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அவர் உடனடியாக மறுப்பு தெரிவிக்காததும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. மேலும், கட்சித் தொடங்கி 16 ஆண்டுகளில் முதன்முறையாக அனைத்து கட்சிக் கூட்டத்தை அவர் கூட்டியிருப்பது அரசியல் ரீதியாகப் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மாநில நலனுக்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும், தொடர்ந்து தனித்துக் கொள்கைப் பிடிப்புடன் இயங்கி வந்த சீமான் தனது அடிப்படைக் கொள்கைகளில் இருந்து தடம் மாறுகிறாரோ என்ற கேள்வியை விமர்சகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர். தேர்தல் அரசியலில் அடுத்த கட்ட நகர்வாகக் பார்க்கப்படும் இந்த அதிரடி மாற்றம், நாம் தமிழர் கட்சியின் எதிர்காலப் போக்கு மற்றும் அதன் கொள்கை நிலைப்பாட்டில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in