LATEST NEWS
“துரைமுருகனுக்கு கல்தா…?” ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. திமுக வட்டாரத்தில் அரங்கேறிய திடீர் திருப்பம்… சூடேறும் அரசியல் களம்..!!
திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகனை விடுவித்துவிட்டு, புதிய நிர்வாகியை நியமிக்கக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களுக்குப் பிறகு கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு உரிய ஓய்வளிக்கத் தலைமை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு கட்சியில் புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகுந்த செல்வாக்குமிக்க இந்தப் பதவியை வகிக்கப்போகும் அடுத்த நபர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
