LATEST NEWS
“தலைமை மீது கைவைத்தால் அடிமட்டம் அடங்கும்” உதயநிதி கைதுக்குப் பின்னால் இருக்கும் CM விஜய்யின் மாஸ்டர் பிளான்.. அதிரும் பனையூர் சோர்ஸ்கள்..!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இது சோர்ந்து கிடந்த திமுக தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளே பரவலாகப் பேசி வருகின்றனர். இந்த அதிரடி அரசியல் நகர்வு திமுகவினரை வீதிகளில் இறங்கிப் போராட வைத்துள்ளதோடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் ஒரு புதிய எழுச்சியையும், தொண்டர்களிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த விவகாரத்தின் பின்னணியில் திமுகவின் உண்மையான பலத்தை ஆழம்பார்ப்பதற்கான தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆழமான அரசியல் வியூகம் இருப்பதாகப் பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எந்த அளவிற்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு கிளம்புகிறது என்பதைச் சோதித்துப் பார்த்து, அதற்கேற்ப தங்களது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் திட்டமிட தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தவெக மற்றும் முதலமைச்சர் விஜய் மீது தனிநபர் விமர்சனங்களை முன்வைத்து வரும் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை சிக்னலாகவே இந்த கைது நடவடிக்கை பார்க்கப்படுகிறது. கட்சியின் மிக முக்கிய உயர்மட்டத் தலைமை மீதே சட்டப்பூர்வமாகக் கைவைக்கும் போது, கீழ்மட்ட நிர்வாகிகள் தங்களுக்குப் பயந்து தானாகவே அமைதியாகிவிடுவார்கள் என்று முதலமைச்சர் விஜய் உறுதியாக நம்புவதாகப் பனையூர் அரசியல் சோர்ஸ்கள் விவரிக்கின்றன.
