“போக்சோ குற்றவாளி தப்பியது எப்படி?” ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி.. ஜெம் கிரானைட்ஸ் விவகாரத்தில் அதிரும் தமிழக அரசியல்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“போக்சோ குற்றவாளி தப்பியது எப்படி?” ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி.. ஜெம் கிரானைட்ஸ் விவகாரத்தில் அதிரும் தமிழக அரசியல்..!!!

Published

on

போக்சோ வழக்கில் சிக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தப்பிச் சென்ற விவகாரத்தில், அவர் தப்பியது எப்படி என்றும் அவருக்கு யார் உதவியது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய பெரிய விவகாரங்கள் எதிலும் முதல்வர் தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்க 100% உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய நிர்மல் குமார், திமுக ஆட்சியில் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம்; ஆனால் இந்த ஆட்சியில் அது நடக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் காவல்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் இந்தச் சம்பவம் மூடி மறைக்கப்பட்டிருக்க முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவரது கவனத்திற்குச் செல்லாமல் இது நடந்திருந்தால் அவர் முதல்வராக இருந்ததற்கே தகுதியற்றவர் என்றும் கடுமையாகச் சாடினார்.

பிரச்சனையின் பின்னணியாக, 2025-ஆம் ஆண்டு விபசார தடுப்புப் பிரிவு போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி (84) சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மற்ற பிரமுகர்களுக்கும் சிறுமிகளை அனுப்பி வைத்தது தெரியவந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் புகைப்பட ஆதாரங்கள் சிக்கிய நிலையில், மேலும் சில சிறுமிகளும் புகார் அளித்தனர். விஷயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய அனைவரும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதோடு, காவல் ஆணையர் அமல்ராஜுடன் தீவிர ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in