LATEST NEWS
“உதயநிதி கைதானதற்கு கனிமொழி தான் காரணமா..?” திமுகவுக்குள் வெடித்த புதிய வாரிசுப் போட்டி.. தமிழக அரசியலை உலுக்கும் உள்கட்சி ரகசியம்..!!
உதயநிதி ஸ்டாலின் கைதான விவகாரத்தின் பின்னணியில் திமுகவின் உள்கட்சி அரசியலும், எதிர்காலத் தலைமைப் போட்டியும் ஒளிந்திருப்பதாகத் தனியார் ஊடகம் ஒன்று பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, உதயநிதியைக் காட்டிலும் கனிமொழி எம்பிக்குத் தான் நீண்டகால அரசியல் அனுபவமும், தேசிய அளவிலான தொடர்புகளும், முதிர்ச்சியான அணுகுமுறையும் அதிகம் உள்ளது. ஒருவேளை திமுகவின் தலைமைப் பொறுப்பு கனிமொழி வசம் சென்றால், தவெக தலைவர் முதலமைச்சர் விஜய்யால் அவருக்கு எதிராக எளிதில் பெண் வாக்கு வங்கியைக் கவர முடியாது என்ற சூழல் உள்ளது. கனிமொழியின் இமேஜ் பெண்கள் மத்தியிலும், நடுநிலை வாக்காளர்கள் மத்தியிலும் சாதகமாக இருப்பதால், பெண்களின் வாக்குகள் இயல்பாகவே அவர் பக்கம் சாயக்கூடும் என அரசியல் கணக்குகள் கூறுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், கனிமொழி கட்சியின் முதன்மைத் தலைவராக உருவெடுப்பதைத் தடுக்கவும், உதயநிதியைத் தான் அடுத்தகட்டத் தலைவராகப் பரிணமிக்க வைக்கவும் திட்டமிட்ட அரசியல் நகர்வுகள் நடப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதயநிதி கைது செய்யப்பட்டுச் சிறைசெல்லும்போது, அவர் ஆதரவாளர்கள் மத்தியிலும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் ஒரு தியாகி அல்லது முதன்மைப் போராளி போன்ற பிம்பத்தைப் பெறுவார். இதன் மூலம், கட்சியின் முழுக் கட்டுப்பாட்டையும் கனிமொழி பக்கம் செல்லவிடாமல் தடுத்து, உதயநிதியை திமுகவின் தவிர்க்க முடியாத தலைவராக நிலைநிறுத்தவே இந்த அரசியல் சூழல் பயன்படுத்தப்படுவதாக அந்த ஊடகப் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
