LATEST NEWS
“கூடவே இருந்தவரே செய்த சம்பவம்..!” RBU-வை அலறவிட்ட ‘அந்த’ நெருங்கிய நபர்… பின்னணியில் அரங்கேறிய திடுக்கிடும் துரோகம்..!!
தேர்தல் காலத்தில் நடைபெற்ற சுவாரசியமான பின்னணி நிகழ்வு ஒன்றை அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். தேர்தல் நடந்து முடிந்த கையோடு, “எப்போதும் உங்களுடனேயே இருப்பேன் அண்ணே” என்று கூறிவிட்டு, தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு அதே நபர் நேரில் வந்து, “அண்ணே என்னை மன்னித்துவிடுங்கள், தவெகவுக்கு வாக்களித்துவிட்டேன்” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் தன்னிடம் அளித்த விளக்கத்தைக் குறிப்பிட்ட ஆர்.பி.உதயகுமார், “என் பேத்தி என் மீது சத்தியம் வாங்கியதால் தான் வேறு வழியின்றி தவெகவுக்கு ஓட்டுப்போட வேண்டியதாயிற்று” என்று அவர் கூறியதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “ஒரு அண்டா பாலில் ஒரு செம்பு தண்ணீர் கலந்தால் என்னவாகுமோ, அப்படித்தான் இந்த நிலையும் என நினைத்தேன்” என்று அந்த நபர் வருத்தத்துடன் கூறியதாகவும் ஆர்.பி.உதயகுமார் நெகிழ்ச்சியுடனும் நகைச்சுவையாகவும் குறிப்பிட்டுள்ளார்.
