LATEST NEWS
“இன்றே பதவி விலக தயார்..!” தேனியை அதிரவைத்த தங்க தமிழ்ச்செல்வனின் திடீர் முடிவு.. அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்..!!
நீதிமன்ற உத்தரவின்படி மேகமலைப் பகுதி மக்களை வெளியேற்ற வனத்துறை முனைந்தால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போராட்டக் களத்தில் இறங்குவேன் என திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசமாக அறிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், நீண்டகாலமாகப் அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே முதன்மையானது என்றும், பொதுமக்கள் வசிக்கும் சொத்துக்களைத் தவிர்த்து மீதமுள்ள நிலங்களை வனத்துறை எடுத்துக்கொள்ளட்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வருசநாடு உள்ளிட்ட 98 மலைக் கிராமங்களுக்கு திமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். நீதிமன்ற உத்தரவு காரணமாக வீடுகள் மற்றும் நிலங்களை இழக்கும் அபாயத்தில் உள்ள மலைக் கிராம மக்களின் உரிமைகளுக்காகத் தனது எம்பி பதவியைத் துறக்கவும் தயார் என மக்கள் மத்தியில் அவர் பேசியது, தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்திலும், மேகமலைப் பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
