LATEST NEWS
தவெகவில் திடீர் அதிரடி.. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களுக்கு பவர்ஃபுல் பதவி… அதிரும் அரசியல் களம்..!!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக விலகி சென்ற தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்குக் கட்சியில் உரிய முக்கியத்துவமும் பதவி உயர்வும் வழங்கப்படுமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்குக் கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், சி. விஜயபாஸ்கருக்குப் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைப்போலவே எம்.ஆர். விஜயபாஸ்கருக்குக் கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஆகிய முக்கியப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களைத் தொடர்ந்து, தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பி மரகதம் குமரவேலுக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில், மூத்த அரசியல்வாதிகளை உள்வாங்கி அவர்களுக்கு உடனடியாக முக்கிய நிர்வாகப் பொறுப்புகளைத் தவெக தலைமை வழங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
