“நண்பர்களா இவங்க..?!” கைதானபோது தெறித்து ஓடிய நண்பர்கள்.. போலி நட்பை பார்த்து நொந்துபோன உதயநிதி… வெளிவந்த பகீர் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நண்பர்களா இவங்க..?!” கைதானபோது தெறித்து ஓடிய நண்பர்கள்.. போலி நட்பை பார்த்து நொந்துபோன உதயநிதி… வெளிவந்த பகீர் தகவல்..!!

Published

on

திமுக இளைஞரணிச் செயலராகவும், பின்னர் துணை முதல்வராகவும் உதயநிதி பொறுப்பேற்றது முதல், அவரது செயல்பாடுகளில் நண்பர்களின் தலையீடு அதிகமிருந்ததாகக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதயநிதியை நேரடியாக அணுக முடியாத அளவிற்கு அவரைச் சுற்றி கார்த்தி, தம்பி பாஸ் என்ற ரத்திஷ், சுஜய், வெங்கட் உள்ளிட்ட பெரிய நட்பு வட்டம் இருந்ததாகவும், அவர்களின் பேச்சைக் கேட்டு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களான நேரு, வேலு, பன்னீர்செல்வம், சுப்பிரமணியன், சேகர்பாபு போன்றோரை உதயநிதி ஓரம் கட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தன்னைச் சந்திக்க வரும் கட்சியின் மூத்த நிர்வாகிகளைக்கூட உதயநிதியும் அவரது நண்பர்களும் மதிக்காமல் அவமதித்ததாக நிர்வாகிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி கைதாகி நள்ளிரவு வரை தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டபோது, வழக்கமாக அவருடன் இருக்கும் நண்பர்கள் யாரும் உடன் வராமல் தெறித்து ஓடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், யாரையெல்லாம் உதயநிதி ஓரம் கட்டினாரோ, அந்த மூத்த நிர்வாகிகள் மட்டுமே வயது முதுமையையும் பொருட்படுத்தாமல் நாள் முழுவதும் அவருடன் களத்தில் நின்றுள்ளனர். ஆபத்தான காலத்தில் உண்மையான கட்சியினரே உடன் நிற்பார்கள் என்பதையும், நெருக்கடி நேரத்தில் நண்பர்கள் கைவிட்டு ஓடியதையும் உணர்ந்த உதயநிதி, தற்போது அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in