“இன்னும் 50 வருஷம் ஆனாலும் கடனை அடைக்க முடியாது..!” ஒரே போடாய் போட்ட நிதிச் செயலாளர்… ஆடிப்போன தமிழக அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இன்னும் 50 வருஷம் ஆனாலும் கடனை அடைக்க முடியாது..!” ஒரே போடாய் போட்ட நிதிச் செயலாளர்… ஆடிப்போன தமிழக அரசு..!!

Published

on

தமிழ்நாட்டின் கடன் நிலுவை அதிகரித்து வரும் நிலையில், “இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனைக் குறைக்க முடியாது” என்று மாநில நிதித் துறைச் செயலாளர் சித்திக் தெரிவித்துள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பட்ஜெட் உரைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் கடன் அளவு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டேதான் இருக்கும் என்றும், மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதன் மூலமாக மட்டுமே இந்தக் கடன் சுமையின் தாக்கத்தைத் தவிர்க்க முடியும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், கடன் சுமை அதிகமாக இருந்தபோதிலும், தற்போதைய அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பாட்டில் உள்ள எந்தவொரு நலத்திட்டங்களையும் முடக்கவோ அல்லது நிறுத்தவோ இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டியிருப்பதால் கடன் வாங்குவது தவிர்க்க முடியாததாகிறது என்றும், அதேநேரம் நிதி மேலாண்மையைச் சீரமைக்க அரசு முயன்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in