LATEST NEWS
நாங்க பேசும்போது இப்படி பண்ணுறீங்களே..? “ஏன் உண்மை வெளியே வந்துடும்னு பயமா..?” அவையில் திமுகவினரை நோக்கி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிரடி கேள்வி..!!
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், ஆளுங்கட்சியான தவெக-விற்கும் எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே அனல் பறக்கும் மோதல் நீடித்து வருகிறது . பேரவையில் பேசிய பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக உறுப்பினர்களின் தொடர் அமளிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றிய போது, ஆளுங்கட்சியான தவெகவினர் அனைவரும் மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார் .
தொடர்ந்து திமுகவினரை நோக்கி ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “நாங்கள் எழுந்து நின்று பேசும் போது மட்டும் திமுகவினர் ஏன் இந்த அளவுக்கு அமளி செய்கிறார்கள்? உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயமா?” என அவையிலேயே மிகக் காட்டமாகச் சாடினார். அமைச்சரின் இந்த அதிரடியான “திமுகவினருக்கு ஏன் பயம்?” என்ற நேரடி வினாவால் கோபமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கடும் கூச்சலிட்டதால், சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பும் அனல் பறக்கும் சலசலப்பும் ஏற்பட்டது.
