CRIME
“நகைக்காக இப்படியா செய்வீங்க..?” தனியாக வந்த பெண்ணை டார்கெட் செய்த ஆட்டோ ஓட்டுநர்.. சிசிடிவியில் சிக்கிய ‘அந்த’ காட்சி.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் தல்லாபுடியில், வின்டே ஆதிலட்சுமி (36) என்ற கைம்பெண் கடந்த செப்டம்பர் 28 அன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். அவர் தனியாக ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இது குறித்து அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆட்டோவைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், ஆட்டோ ஓட்டுநரான ஷேக் யாகூப் என்பவர், ஆதிலட்சுமியிடமிருந்த 30 கிராம் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு, அவரை கோதாவரி ஆற்றில் தள்ளிவிட்டது தெரியவந்தது.
தங்க நகைகளுக்காகப் பெண் பயணி ஒருவரைக் கொடூரமான முறையில் ஆற்றில் தள்ளிவிட்ட ஆட்டோ ஓட்டுநரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் தள்ளப்பட்ட ஆதிலட்சுமியைக் கண்டுபிடிப்பதற்காகக் கடந்த புதன்கிழமை முதல் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் கோதாவரி ஆற்றில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பலத்த நீரோட்டம் காரணமாக இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தத் துணிகரச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
