LATEST NEWS
“பெத்த பிள்ளைகளும் கைவிட்டாங்க”… இப்போ போலீசாரும் உயிரின் எதிரியானார்கள்… கதறியழும் 70 வயது பெற்றோரின் நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
ஆக்ரா போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் உள்ள மால்புரா காவல் நிலைய போலீசாரின் கடுமையான அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காவல்துறையின் செயல்பாடுகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தனது சொந்தப் பிள்ளைகளால் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளான 70 வயது மூத்த தம்பதியினர் , இது குறித்து நியாயம் கேட்க மால்புரா காவல் நிலையத்தை நாடியுள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பிள்ளைகளின் தொல்லையிலிருந்தும் அச்சுறுத்தலிலிருந்தும் தங்களைக் காப்பாற்ற வேண்டிய மால்புரா போலீசார் தங்களுக்கு உதவாமல் அலட்சியம் காட்டியதால், மனமுடைந்த அந்தப் பெற்றோர் “மால்புரா போலீசாரே எங்கள் உயிரின் எதிரிகள்” என கண்ணீருடன் தங்களது குமுறலை அந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளனர்.
