உச்சகட்ட பயங்கரம்..! குடிபோதையில் காரை ஏற்றி 7 பேரை துவம்சம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியர்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உச்சகட்ட பயங்கரம்..! குடிபோதையில் காரை ஏற்றி 7 பேரை துவம்சம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியர்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

ஹைதராபாத் கமலா நகர் பகுதியில் குடிபோதையில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஓட்டி வந்த கார், பாதசாரிகள் கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்து மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர். குஷாய்குடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செப்டம்பர் 29ஆம் தேதி இந்த அதிர்ச்சியூட்டும் விபத்து நிகழ்ந்துள்ளது. கார் மோதியதில் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று அவர்கள் மீது மிகக் கொடூரமாக மோதி ஏறிச் சென்றது. விபத்தை ஏற்படுத்திய பின்னரும் காரை நிறுத்தாமல் ஓட்டுநர் அங்கிருந்து அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக இ.சி.ஐ.எல் பகுதியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குஷாய்குடா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் விபத்தை ஏற்படுத்தியவர் பவன் என்ற மென்பொருள் பொறியாளர் என்பதும், விபத்தின் போது அவர் கடுமையான குடிபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. காரில் அவருடன் பயணித்த மற்றொரு நபரையும் அடையாளம் கண்டுள்ள போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in