CRIME
“ஹலோ போலீஸ்.. என் அம்மாவைக் கொலை பண்ணிட்டேன்..” காவலரை அதிரவைத்த 17 வயது மகன்.. மிரளவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்தத் தாயையே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீர் என்ற அந்தச் சிறுவன், தனது 42 வயது தாய் கீதா பாக் சந்தானியுடன் ஏற்பட்ட தகராறில், வீட்டில் இருந்த குரடு போன்ற இரும்புக் கருவியால் அவரது தலையில் பலமுறை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த பயங்கரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கீதா, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாயைக் கொலை செய்த பின்னர், அந்தச் சிறுவன் எவ்வித பயமும் இன்றி அவரே காவல்துறைக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, “ஹலோ போலீஸ், நான் என் அம்மாவைக் கொலை செய்துவிட்டேன், நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள்” என்று அதிர்ச்சியூட்டும் வகையில் கூறியுள்ளார். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கீதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொலை செய்த 17 வயது சிறுவன் சமீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
