“எனக்கு நீதான் வேணும்…” கள்ளக்காதலிக்காக மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. கொலையை மறைக்க போட்ட பகீர் நாடகம் அம்பலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“எனக்கு நீதான் வேணும்…” கள்ளக்காதலிக்காக மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. கொலையை மறைக்க போட்ட பகீர் நாடகம் அம்பலம்..!!

Published

on

அமெரிக்காவின் பிரபல ‘அமெரிக்கன் ஐடல்’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவரும், முன்னாள் தேவாலய இசை போதகருமான 40 வயது காலேப் ஃபிளின் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு பதின்மவயது பெண் குழந்தைகளின் தந்தையான இவர், தான் பணியாற்றிய தேவாலயத்தில் 20 வயது பயிற்சிப் பணியாளராகச் சேர்ந்த அல்லீஹா போட்னர் என்ற பெண்ணுடன் பல ஆண்டுகளாகக் கள்ள உறவில் இருந்துள்ளார். இந்தக் கள்ளக்காதலிக்காகத் தனது மனைவி ஆஷ்லியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஃபிளின், “மனைவியைக் கொலை செய்தால் குற்றத்திலிருந்து எப்படித் தப்பிப்பது?” என்று திட்டமிட்டுள்ளார். கொலை நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, “நான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறேன், நான் சுதந்திரமாக இருக்கிறேன்” என்று தனது கள்ளக்காதலிக்கு அவர் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 16 அன்று டிப் சிட்டியில் உள்ள தனது வீட்டில் வைத்து மனைவி ஆஷ்லியை 9மிமீ கைத்துப்பாக்கியால் ஃபிளின் சுட்டுக் கொன்றார். பின்னர், இக்கொலையை மறைப்பதற்காகத் தனது வீட்டில் ஒரு போலி கொள்ளைச் சம்பவம் நடந்தது போல நாடகமாடியுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்கப்படவில்லை என்றும், நேரடி ஆதாரங்கள் இல்லை என்றும் ஃபிளினின் வழக்கறிஞர் வாதிட்ட போதிலும், மியாமி கவுண்டி நடுவர் குழு தீவிர ஆலோசனைக்குப் பிறகு ஃபிளின் மீதான கொடூரக் கொலை மற்றும் ஆதாரங்களைத் திரித்தல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் உறுதி செய்து அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத ஃபிளினுக்கு, பரோல் கிடைக்க வாய்ப்பில்லாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கில் வரும் அக்டோபர் 5-ம் தேதி இறுதித் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in