LATEST NEWS
“ஆமாம் நாங்க சோஃபா அனுப்பினது உண்மைதான்” விசிக, மதிமுகவுக்கு அனுப்பியது ஏன் ..? உண்மையை ஒத்துக்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திமுகவினர் தங்களுக்கு எதிராக முன்வைக்கும் “சோபா” விமர்சனங்களுக்கு மிகக் கடுமையான மற்றும் ஆவேசமான முறையில் மேடையில் விளக்கமளித்துப் பேசியுள்ளார். தவெக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை வளைப்பதற்காகத் தாங்கள் சோபாக்களை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மேடையில் நேரடியாகக் கையாண்டார்.
அரசியல் மேடையில் பேசிய அவர், “நாங்கள் சோபாக்களை அனுப்பியது உண்மைதான்” என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இருப்பினும், அது லஞ்சம் கொடுப்பதற்காக அல்ல என்று மறுத்த அவர், தற்போதைய திமுக ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருக்கும் முஸ்லிம் மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் தலைவர்கள், தவெக கூட்டணியின் மூலம் எதிர்காலத்தில் அதிகாரப் பொறுப்பில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்காருவதற்காகவே அந்தச் சோபாக்களை அனுப்பி வைத்தோம் என்று சமூக நீதியைக் காரணம்காட்டி ஆவேசமாகத் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
