“அப்போ நீ செத்துப்போய்டுவியமா…! அம்மா கேட்ட ஒரு கேள்வி… கதறி அழுத குட்டிப்பையன்…! சோஷியல் மீடியாவை கண் கலங்க வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்போ நீ செத்துப்போய்டுவியமா…! அம்மா கேட்ட ஒரு கேள்வி… கதறி அழுத குட்டிப்பையன்…! சோஷியல் மீடியாவை கண் கலங்க வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!!”

Published

on

சமூக வலைத்தளங்களில் தாய் மற்றும் மகனுக்கு இடையேயான உணர்ச்சிப்பூர்வமான உரையாடல் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாய் தனது சிறுவனிடம், “நான் எங்காவது சென்றுவிட்டு மீண்டும் வரவில்லை என்றால் என்ன செய்வாய்?” என்று ஒரு கற்பனையான கேள்வியைக் கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுவன் மிகவும் அப்பாவித்தனமாக, “அம்மாவின் புகைப்படத்தை நேசிப்பேன்” என்று பதிலளிக்கிறான். ஆரம்பத்தில் இந்த பதில் சிரிப்பை ஏற்படுத்தினாலும், அடுத்த சில வினாடிகளிலேயே அம்மாவின் கேள்விக்கான முழு அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அச்சிறுவனின் முகத்தில் பயமும் கவலையும் தொற்றிக்கொள்கிறது.

அம்மாவைப் பிரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அந்தச் சிறுவன் சில வினாடிகளிலேயே கண்ணீர் விட்டு அழத் தொடங்குகிறான். “நீங்கள் இறந்துவிடுவீர்களா?” என்று நடுங்கும் குரலில் கேட்கும் சிறுவன், அப்படி ஏதேனும் நடந்தால் தனது அம்மா விரைவில் திரும்பி வர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறுகிறான். தனது கேள்வியால் குழந்தை மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்த தாய், உடனடியாக அவனை கட்டிப்பபிடித்து அணைத்துக் கொள்கிறான். தான் எப்போதும் அவனுடனேயே இருப்பேன் என்றும், அவனை விட்டு எங்கும் செல்லமாட்டேன் என்றும் கூறி ஆறுதல் அளித்து தேற்றுகிறார்.

Advertisement

https://www.instagram.com/reel/DXWTMNFk8cz/?utm_source=ig_web_button_share_sheet

தாயின் ஆறுதலுக்குப் பிறகு சிறுவன் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பி, இறுதியில் புன்னகையுடன் தனது கைகளால் இதய வடிவக் குறியீட்டைச் செய்து காட்டுகிறான். இருப்பினும், தாயைப் பிரிவதைப் பற்றிய அச்சம் சிறுவனின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் இணையவாசிகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் சிறுவனின் தாயின் மீதான அன்பையும் அவனது வெள்ளந்தித்தனத்தையும் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், இதுபோன்ற கேள்விகள் குழந்தைகளின் பிஞ்சு மனதில் ஆழமான அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in