LATEST NEWS
“ஸ்டாலின் தொகுதி ரிசல்ட்டில் திடீர் திருப்பம்…” NR இளங்கோ உடைத்த மாபெரும் EVM ரகசியம்.. தமிழக அரசியலைக் உலுக்கும் புதிய சர்ச்சை..!!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 30% இயந்திரங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டதாக திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டைக் சுமத்தியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் பெயர் மற்றும் சின்னம் இடம்பெற்றிருந்த பேலட் யூனிட்டை, அதனுடன் இணைக்கப்பட்ட கண்ட்ரோல் யூனிட் சரியாக அடையாளம் காணத் தவறியது ஆய்வில் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் அரங்கேறியுள்ள இந்தத் தொழில்நுட்ப குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறினார். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்விக்கு பின்னால் இதுபோன்ற மின்னணு இயந்திரக் கோளாறுகளே முக்கியக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்த ஆய்வு முடிவுகள் வலுப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவுகளில் ஏதேனும் சட்டப்பூர்வ திருப்புமுனை அல்லது மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்ப்பும் விவாதமும் அரசியல் வட்டாரத்தில் மேலோங்கியுள்ளது.
