LATEST NEWS
“உண்மையில் காதுகுத்துறது யாரு..? நீட் ஒழிப்பு ரகசியம் தெரியும்னு சொன்ன நீங்களா… நாங்களா..?” உதயநிதியை நேருக்கு நேர் நிறுத்தி சட்டசபையில் தெறிக்கவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்..!!
தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், அரசின் பல்வேறு திட்டங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பதைக் குறிப்பிட்டு, இது “தாய் மாமன் காது குத்தும் திட்டம்” எனப் பெயரிடலாம் என்று விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன், உண்மையில் “நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும்” என்று உதயநிதி கூறியதுதான் மிகப்பெரிய “காதுகுத்து” என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் எஃப்.ஐ.ஆர். ஆன்லைனில் பதிவிடப்பட்டு அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளைக் சுட்டிக்காட்டினார். மேலும், மெரினா கடற்கரைக்கு எப்படிப் பூட்டு போடுவது என்பதை முந்தைய தி.மு.க. அரசுதான் கற்றுக் கொடுத்ததாகவும், கடந்த ஆட்சியில் மெரினாவுக்குப் பூட்டு போடுவதில் பி.எச்.டி. செய்தவர்கள் தி.மு.க.வினர்தான் என்றும் சாடினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் அவைக்குச் சரியாக வருவதில்லை என்ற அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்து, வருகைப் பதிவேட்டைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுமாறு கூறினார். மேலும், பட்டிமன்றப் பேச்சாளரான அமைச்சர் ராஜ்மோகன் த.வெ.க-வில் இணைவதற்கு முன்பாக, பல மேடைகளில் தி.மு.க-வை ஆதரித்துப் பேசிவிட்டு தற்போது கட்சி மாறியதும் வேறு விதமாகப் பேசி வருகிறார் என்று சாடினார்.
