LATEST NEWS
“திமுக எங்களுக்கு கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமா..?” முதல்வர் விஜய்க்கு எப்போ பேசணும்னு தெரியும்.. அவையில் வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆனந்த்..!!
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக மற்றும் ஆளுங்கட்சியான தவெக இடையே அனல் பறக்கும் அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது . பேரவையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், கடந்த காலங்களில் தவெக கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் திமுக கொடுத்த நெருக்கடிகளை மிகக் காரசாரமாகப் பட்டியலிட்டுப் பேசினார். எதிர்க்கட்சியினர் தவெக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவதற்குப் பதிலடி கொடுத்த அவர், “முதலமைச்சர் விஜய்க்கு எதை எப்போது பேச வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்பது மிக நன்றாகவே தெரியும்” என்று அவையிலேயே ஆக்ரோஷமாக முழங்கினார்.
தொடர்ந்து திமுக உறுப்பினர்களை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அமைச்சர் ஆனந்த், “கடந்த இரண்டு வருடங்களாக எங்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதால் தான் இன்று நீங்கள் மக்கள் தீர்ப்பால் எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்திருக்கிறீர்கள்” என்று மிகக் காட்டமாகச் சாடினார். மேலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தவெக-விற்கும் தங்களுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தார்கள் என்பது தமக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டதால், அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் கடும் கோபமடைந்து கூச்சலிட்டனர். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சால் சட்டப்பேரவை வளாகமே இன்று பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
