LATEST NEWS
என் தந்தை இறந்தபின்.. அந்த ஸ்தானத்தில் இருப்பவர் இந்த மனுஷன் தான்.. 15 வருஷமா என் வாழ்க்கையில்… அமைச்சர் ஆனந்த் குறித்து அமைச்சர் பர்வேஸ் உருக்கம்..!!
அமைச்சர் ஆனந்த் குறித்து அமைச்சர் ஃபர்வாஸ் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் தற்பொழுது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தன்னைச் சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய ஒரே நபர் அமைச்சர் ஆனந்த் மட்டும்தான் என்று அவர் நெகிழ்ந்து போயுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பயணித்ததால்தான், இன்று இந்த உயர்ந்த நிலைக்குத் தான் வந்து நிற்பதாக அவர் தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் ஆனந்த் தனக்கு ஒரு அரசியல் வழிகாட்டியாக மட்டுமன்றி, ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து ஒவ்வொரு சூழ்நிலையிலும் துணையாக நின்றதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இந்த 15 ஆண்டு கால அரசியல் பயணம் தனக்கு பல அனுபவங்களைக் கற்றுத் தந்துள்ளதாகவும், அவரின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என்றும் ஃபர்வாஸ் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.
