“என்னை மிரட்டுறாங்க..” லேடி இன்ஸ்பெக்டரின் ஆபாச வீடியோ கால்.. சிறைக்குள் ரவுடியுடன் அரங்கேறிய கூத்து.. பெண் அதிகாரி மீது கைதி போட்ட மெகா குண்டு..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை மிரட்டுறாங்க..” லேடி இன்ஸ்பெக்டரின் ஆபாச வீடியோ கால்.. சிறைக்குள் ரவுடியுடன் அரங்கேறிய கூத்து.. பெண் அதிகாரி மீது கைதி போட்ட மெகா குண்டு..!!

Published

on

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடியுடன் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் ஆபாசமாக வீடியோ காலில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்த கைதியே பெண் காவலர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு ஹிண்டல்கா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாய்குமார் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியுடன், அங்கு முன்பு பணியாற்றிய கர்நாடக தொழில்துறை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் ஆடை இன்றி வீடியோ காலில் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் கசிந்து சர்ச்சையானதை அடுத்து, அந்த பெண் காவலர் தன் பெயரைக் கெடுக்க ரவுடிகள் முயல்வதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு திடீரென நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட கைதியான சாய்குமார் அந்த பெண் காவல் ஆய்வாளர் மீது லஞ்சம் மற்றும் சிறை முறைகேடு தொடர்பாக அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது தனிப்பட்ட தேவைகளுக்காகவும், லஞ்சப் பணத்திற்காகவும் அந்த பெண் அதிகாரி சிறைக்குள் தடை செய்யப்பட்ட மொபைல் போன்கள், போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களை ரகசியமாக சப்ளை செய்ததாக கைதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சிறைக்குள் நடக்கும் இந்த தில்லுமுல்லுகளை வெளியில் சொன்னால் கொலை அல்லது பொய் வழக்குகளில் சிக்க வைத்துவிடுவேன் என்று அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளதால், தற்போது அந்த பெண் காவலர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கைகள் பாயத் தொடங்கியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in