தேர்தலில் நிக்கணும்னா முதல்ல உங்க முடிய கட் பண்ணுங்கன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.. அதுக்கப்புறம் ஒருவாரம் கழிச்சி… நிதியமைச்சர் பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் பகிர்ந்த விஷயம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தேர்தலில் நிக்கணும்னா முதல்ல உங்க முடிய கட் பண்ணுங்கன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.. அதுக்கப்புறம் ஒருவாரம் கழிச்சி… நிதியமைச்சர் பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் பகிர்ந்த விஷயம்…!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிதியமைச்சர் மரிய விலாசனின் முந்தைய சிகை அலங்காரம் குறித்தும், அவரது தேர்தல் வெற்றி குறித்தும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சுவாரசியமாகப் பேசியுள்ளார். சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், “இன்றைய நிதியமைச்சர் ஒரு காலத்தில் முடியை ஒரு மாதிரியாக (ஹிப்பி ஸ்டைலில்) வைத்துக் கொண்டுதான் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அதைப் பார்த்துவிட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் முதலில் இந்த முடியை வெட்ட வேண்டும் என்று நான் ஸ்ட்ரிக்டாகச் சொல்லிவிட்டேன்” என்று கடந்த கால நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

அமைச்சரின் அந்த அறிவுரையைக் கேட்டு, ஒரு வாரம் கழித்து வந்த மரிய வில்சன் தனது முடியையெல்லாம் முழுமையாக வெட்டி நேர்த்தியாக மாற்றியிருந்தார் என்றும், அதைப் பார்த்த தான் ‘நீங்கள் கண்டிப்பாக இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவீர்கள்’ என்று வாழ்த்தியதாகவும் ஆனந்த் அவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் மிகவும் கலகலப்பான சூழலில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசிய இந்த சுவாரசியமான பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடையே பரவலாகக் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in