LATEST NEWS
“அமைச்சர் பதவியிலிருந்து தூக்குங்க” லஞ்ச விவகாரத்தை ஒப்புக்கொண்ட அமைச்சர் மரிய வில்சன்.. அதிரடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் நெருக்கடி..!!
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது முதலமைச்சர் விஜய் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். முந்தைய ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்திற்கு நானே சாட்சி என்று அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையிலேயே பகிரங்கமாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
குறுக்குவழியில் அனுமதி வாங்குவதற்காக அமைச்சர் மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் சட்டரீதியான குறைபாடுகள் என்னென்ன உள்ளன என்ற கேள்வியை நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார். மேலும், லஞ்சம் கேட்டவர் மீது அமைச்சர் மரிய வில்சன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எவ்வித புகாரும் அளிக்காதது ஏன் என்றும், லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டவரை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
லஞ்சம் வாங்கிய விவகாரத்திற்குத் தானே சாட்சி எனச் சட்டப்பேரவையிலேயே அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளதால், முதலமைச்சர் விஜய் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் உறுதியாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
