“நீ இல்லாம என்னால இருக்க முடியாது பேபி..! உன் புருஷனைத் தீர்த்துக்கட்டுறதைப் பத்தி அன்னைக்கே சொன்னியே..?” ஜலந்தர் நேஹா கொலையில் அம்பலமான 206 பக்க காதல் மற்றும் கொலை சாட்டிங்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீ இல்லாம என்னால இருக்க முடியாது பேபி..! உன் புருஷனைத் தீர்த்துக்கட்டுறதைப் பத்தி அன்னைக்கே சொன்னியே..?” ஜலந்தர் நேஹா கொலையில் அம்பலமான 206 பக்க காதல் மற்றும் கொலை சாட்டிங்..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விரிவுரையாளர் நேஹா கொலை வழக்கில், அவரது கணவர் உமங் பஸ்சி மற்றும் காதலி சத்பால் கவுர் இடையேயான 206 பக்க வாட்ஸ்அப் அரட்டைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் இருவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு, இரகசிய சந்திப்புகள், திருமணம் செய்து கொள்ளும் திட்டங்கள் மற்றும் தங்களின் வாழ்க்கைத் துணைவர்களை வழியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டங்கள் ஆகியவை அம்பலமாகியுள்ளன. தங்களின் அடையாளத்தை மறைப்பதற்காக, மொபைல் போன்களில் போலி பெயர்களில் எண்களை சேமித்து வைத்துள்ளனர். சத்பால் கவுர் தனது போனில் உமங்கின் எண்ணை ‘தான்வி’ என்றும், உமங் தனது போனில் சத்பாலின் எண்ணை ‘சத்லாப்’ என்றும் சேமித்திருந்தனர். மேலும், இருவரும் தங்களுக்குள் ‘பேபி’, ‘ஷோனா’ எனக் கூறிக்கொண்டு அன்பைப் பகிர்ந்த உரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.

2026 ஜனவரி 15 ஆம் தேதி நடந்த உரையாடலில், கணவரைக் கொல்வது குறித்தான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. அதில் உமங் சத்பாலிடம், “நீ முன்பே உன் கணவரைக் கொல்வது பற்றிப் பேசினாய்” என்று கூறியதற்கு, சத்பால் “உமங், உனக்கு எல்லாம் தெரியும்” எனப் பதிலளித்து, தனது வாயை மூடி அமைதியாக இருக்குமாறு எச்சரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வது பற்றியும், தங்களின் தற்போதைய திருமண உறவிலிருந்து விடுபட்டு ஒன்றாக வாழ்வது குறித்தும் விவாதித்துள்ளனர். சத்பால் “நாம் திருமணம் செய்துகொள்வோம்” எனக் கூற, உமங் தனது தாயிடம் இந்த உறவைப் பற்றி விரைவில் கூறி விடுவதாகப் பதிலளித்துள்ளார். மேலும், திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளை ஒரு புதிய குடும்ப சூழலில் வளர்ப்பது மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்த விரிவான திட்டங்களையும் அவர்கள் ஆலோசித்துள்ளனர்.

Advertisement

இவர்களுக்கிடையேயான உடலுறவு மற்றும் “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒன்றாக இணைவோம்”, “நீ இல்லாமல் நான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்” போன்ற உணர்ச்சிவசப்பட்ட செய்திகளும் அந்த அரட்டையில் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது சத்பால் கவுர் காவல் துறையின் காவலில் உள்ள நிலையில், அவரது கணவர் விஷால் சர்மாவே இந்த வாட்ஸ்அப் சாட்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இந்த 99% உரையாடல்களில் இருவருடைய வாழ்க்கைத் துணைவர்களையும் பிரிவது மற்றும் கொலை செய்வதற்கான சதித்திட்டங்களின் அறிகுறிகள் மறைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜலந்தர் காவல்துறையினர் இந்த வாட்ஸ்அப் ஆதாரங்களை நீதிமன்றத்தில் மின்னணு சான்றுகளாக தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in