CRIME
குடும்பப் பகை உயிரைப் பறித்தது.. சப்பாத்திக்கட்டையால் கொழுந்தனை அடித்தே கொன்ற அண்ணி… கன்னியாகுமரியை உலுக்கிய சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக, 66 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் அவரது அண்ணி பொன்னாம்மாளால் சப்பாத்திக் கட்டையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த நிலம் தொடர்பான தகராறு, இந்த விபரீத கொலைச் சம்பவத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பொன்னாம்மாள் வீட்டில் இருந்த சப்பாத்திக் கட்டையை எடுத்து பாலகிருஷ்ணனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலகிருஷ்ணனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தற்போது தலைமறைவாக இருக்கும் பொன்னாம்மாளைக் கைது செய்ய தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
