நீ அவன்கூட போயிட்ட.. இடத்தை என் பிள்ளைங்க பெயரில் எழுதி வை… கள்ளகாதலுடன் ரூ.22 லட்சத்துடன் ஓடிப்போன மனைவி… வங்கி வாசலிலேயே கல்லால் அடித்தே கொன்ற கணவன்..!! – cinefeeds
Connect with us

CRIME

நீ அவன்கூட போயிட்ட.. இடத்தை என் பிள்ளைங்க பெயரில் எழுதி வை… கள்ளகாதலுடன் ரூ.22 லட்சத்துடன் ஓடிப்போன மனைவி… வங்கி வாசலிலேயே கல்லால் அடித்தே கொன்ற கணவன்..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே நிலத்தை விற்ற பணத்துடன் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி வித்யாவை (30), கணவர் நாராயணசாமி (39) கல்லால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸார், கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து நாராயணசாமியைக் கைது செய்தனர்.

கொல்லப்பட்ட வித்யா தனது நிலத்தை ரூ.22 லட்சத்திற்கு விற்றுவிட்டு, அப்பணத்துடன் தனது கள்ளக்காதலனுடன் தனியாகச் சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், பணம் தொடர்பாக வித்யா வங்கிக்கு வந்திருப்பதை அறிந்த அவரது கணவர் நாராயணசாமி, அவரைத் தேடி வங்கிக்குச் சென்றுள்ளார்.

Advertisement

அங்கு வைத்து வித்யாவிடம், நிலத்தை விற்ற சொத்து மற்றும் பணத்தைக் குழந்தைகளின் பெயரில் எழுதி வைக்குமாறு நாராயணசாமி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தகராறில் ஆத்திரமடைந்த நாராயணசாமி, வித்யாவைக் கல்லால் கொடூரமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in