ஐயோ கடவுளே.. “நீ ரொம்ப குண்டா இருக்க..” பெற்ற மகனை சித்திரவதை செய்த சைக்கோ தந்தை.. 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. சிசிடிவி வீடியோவைப் பார்த்து உறைந்துபோன நீதிபதிகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. “நீ ரொம்ப குண்டா இருக்க..” பெற்ற மகனை சித்திரவதை செய்த சைக்கோ தந்தை.. 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. சிசிடிவி வீடியோவைப் பார்த்து உறைந்துபோன நீதிபதிகள்..!!

Published

on

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், தனது 6 வயது மகன் கோரி மிசியோலோ”அதிக குண்டாக” இருப்பதாகக் கூறி, அவனை அதிவேகமாக ஓடும் டிரெட்மில்லில் கட்டாயப்படுத்தி ஓட வைத்து கொடுமைப்படுத்திய தந்தை கிறிஸ்டோபர் கிரிகோரின் கொடூர நீதிமன்றக் காட்சிகள் வெளியாகி உலகையே உலுக்கியுள்ளன. நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட புதிய வீடியோ பதிவில், மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் டிரெட்மில்லில் இருந்து அந்தச் சிறுவன் பலமுறை முகங்குப்புறக் கீழே விழுந்துஅலறுவதும், அவனது தந்தை இரக்கமின்றி அவனை மீண்டும் மீண்டும் தூக்கி அதன் மேல் போடுவதும் பதைபதைக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி, சிறுவனை ஓடக் கட்டாயப்படுத்தியபோது அந்தத் தந்தை அவனது தலையைக் கடித்ததாகவும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் இந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த அவனது தாய் கதறி அழுதார்.

NEW: Mother breaks down in court as she watches her son’s father abuse her child by making him run on the treadmill because he was “too fat.”

New Jersey father Christopher Gregor is accused of killing his 6-year-old son Corey Micciolo.

New footage shows the boy repeatedly face… pic.twitter.com/hYqJZNx2uk— QUANTUM GUARD ™️ (@QuantumGuard17) August 24, 2026

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் வார்த்தைகளை உளறத் தொடங்கி, தடுமாறி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்; அங்கு சிடி ஸ்கேன் பரிசோதனை நடக்கும்போதே அவனுக்கு வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் உடற்கூறாய்வு அறிக்கையில், கடுமையான தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள், இதயம் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட சிதைவுகள், தீவிர அழற்சி மற்றும் செப்சிஸ் தொற்று காரணமாகவே அவன் உயிரிழந்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது சொந்த மகனையே சித்திரவதை செய்து கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த கொடூரத் தந்தை கிறிஸ்டோபர் கிரிகோருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் தீர்ப்பு மற்றும் பதைபதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in