“சின்ன பையன் உனக்கு கேட்குதா..?” 29 வயது இளைஞனுக்காகப் பழைய காதலை முறித்த 50 வயதுப் பெண்… ஆத்திரத்தில் உடலை எரித்த முன்னாள் கள்ளக்காதலன்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“சின்ன பையன் உனக்கு கேட்குதா..?” 29 வயது இளைஞனுக்காகப் பழைய காதலை முறித்த 50 வயதுப் பெண்… ஆத்திரத்தில் உடலை எரித்த முன்னாள் கள்ளக்காதலன்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!

Published

on

கர்நாடக மாநிலத்தில் 29 வயது கள்ளக்காதலனுக்காகத் தன்னைத் தவிர்த்த 50 வயதுப் பெண்ணை, அவரது முன்னாள் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்து உடலைத் தீயிட்டு எரித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்காவி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50) என்ற பெண், கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலாளியான நாகராஜ் (55) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருடன் புதிய பழக்கம் ஏற்பட்டதால், அவர் நாகராஜைத் தவிர்த்துவிட்டு அந்த வாலிபருடன் நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார்.

தனது காதலை முறித்துக் கொண்டு புதிய வாலிபருடன் லட்சுமி பழகுவதை அறிந்த நாகராஜ் கடும் ஆத்திரமடைந்துள்ளார். லட்சுமியைக் கண்டித்தும் அவர் கேட்காததால், திட்டமிட்டபடி ஆசையாகப் பேசி தான் வேலை செய்யும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தோட்டத்திற்கு லட்சுமியை ரகசியமாக வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்த பின்னர், அந்த 29 வயது வாலிபரைப் பற்றி நாகராஜ் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில், ஆத்திரத்தின் உச்சமடைந்த நாகராஜ் அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் லட்சுமியின் தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

Advertisement

கொலையை மறைப்பதற்காக லட்சுமியின் உடலைத் தோட்டத்தின் மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று நாகராஜ் தீ வைத்துள்ளார். மறுநாள் காலை தோட்டத்திற்கு வந்த உரிமையாளர், பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தீவிர விசாரணை நடத்தி கொலையாளி நாகராஜை அதிரடியாகக் கைது செய்தனர். கள்ளக்காதல் மோதலில் பெண் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in