CRIME
“இத செய்யல.. போட்டோவ லீக் பண்ணிருவேன்..!” AI-ல் நிர்வாணப் படம் தயாரித்து கல்லூரி மாணவியை மிரட்டிய சைக்கோ.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
புது டெல்லியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்லூரி மாணவி ஒருவரின் போலி நிர்வாணப் புகைப் படத்தை உருவாக்கி, “நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இணையத்தில் லீக் பண்ணிடுவேன்” என மிரட்டி 1.2 லட்சம் ரூபாய் பறித்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் துபே (25) என்ற பயங்கர காமுகனை சைபர் க்ரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தென்மேற்கு தில்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான அந்த மாணவிக்கு, கடந்த 2023 டிசம்பரில் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான இந்த அஜய் துபே, காலப்போக்கில் மாணவியின் சாதாரணப் படத்தை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றி மிரட்டி வந்துள்ளான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தக் கொடுமையை யாரிடமும் சொல்லாமல் மன உளைச்சலில் தவித்த அந்தப் பெண், தன் தாயின் வங்கிக் கணக்கிலிருந்து சிறு சிறு தவணைகளாக அவனுக்குப் பணம் அனுப்பி வந்துள்ளார்; இதனைப் பெண்ணின் தந்தை கவனித்த பிறகே இந்த மெகா விபரீதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பணப் பரிவர்த்தனை அம்பலமானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் மாமாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அநாகரிகமாகத் திட்டிய அந்தச் சைக்கோ, தங்களுக்கு இணங்காவிட்டால் மாணவி மீது ஆசிட் வீசித் தாக்குதல் நடத்துவேன் என்றும் கொடூரமாக மிரட்டியுள்ளான். இதனால் அதிரமடைந்த மாணவி இறுதியாகக் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவே, போலீஸார் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய இந்த அஜய் துபே டெல்லி நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது கையும் களவுமாக வளைத்துப் பிடிக்கப்பட்டான். ஏஐ தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி டெல்லி மாணவியின் வாழ்க்கையை நரகமாக்கிய இந்தக் கொடூரக் காமுகனைப் பற்றிய செய்தி, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெற்றோர்கள் மற்றும் கல்லூரிப் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
